Skip to main content

Meeting with MLA and EO on Greivance(Dtd 29/10/2017)

At the "Sunday meeting with EO & MLA" meeting held today, these high-priority issues were discussed with EO, MLA, Panchayath Engineer and other officials.

We have been given assurances that issues will be given priority and we should see results soon.
Tambaram S R RAJA MLA  has also assured us a dedicated meeting with the collector Mr.Ponniah, to discuss these issues in the coming days.

some  instant decisions were made, such as funds for muthulakshmi nagar well cleanup,  fixing pachaimalai rain inlets, desilting drains. We will follow-up on those.

Needless to say, Congratulations to all of us, who spent 3 hours on a beautiful Sunday at Panchayath, discussing these topics.

We need more of our chitlapakkam residents to come out of their homes and join us. Questioning is the only way for finding answers, from a government engine that was left to rust for many years.

Let us question. Let us demand answers!!!

 Chitlapakkam Lake - Move Garbage Dumpyard
 Chitlapakkam Lake – Shut off Drainage & Sewage Inlets
 Chitlapakkam Lake – Fix canals to allow Pachaimalai water to enter lake
 Chitlapakkam & Sembakkam Lake – Recover encroachments and lay proper boundaries
 Install a proper STP to properly treat water before letting in to lakes
 Clear encroachments on water canals that causes flooding and endanger lives
 Remove water hyacinths in lake and Clean & Desilt lakes
 Provide permission to install a ‘Kindness Wall’
 Fix pot-holes in several roads
 Stop sewage and drainage inflow into storm water drains
 Road encroachments – Inspect, issue notice and clear.
 Roads widening – where needed introduce one-way (Nehru, Gandhi, Anna)
 Improve transparency in Panchayaths – Tender notices  are to be timely displayed
 Close bio-pit in Chitlapakkam lake before kids and cattles get impacted
 Provide permanent EO
 Ensure monthly grievance redressals at Panchayath office
 Implement Waste segregation – Penalize businesses and residences who ignores
 Implement plastic avoidance – Penalize offenders
 Avoid Selaiyur lake from flooding Chitlapakkam
 Bring Underground drainage scheme to Chitlapakkam
 Dog & Cattle menace in Chitlapakkam
 Muthulakshmi Nagar well cleanup and desilting
 Street lights

------

சிட்லபாக்கம் பகுதி மக்களின் குறைகளை களைவது தொடர்பாக ’சிட்லபாக்கம் பஞ்சாயத்து EO மற்றும் MLA’ உடனான சந்திப்பு இன்று நடைப்பெற்றது. நமது குறைகளையும், கோரிக்கைகளையும் கண்டிப்பாக நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்கள்.

முக்கியமாக இன்று விவாதிக்கப்பட்ட விசயங்கள்:

1. சிட்லபாக்கம் ஏரியில் இருக்கும் குப்பை கிடங்கை அகற்றுதல்
2. சிட்லபாக்கம் ஏரியில் கலக்கும் கழிவு நீரை தடுத்தல்.
3. சிட்லபாக்கம் ஏரியில் பச்சைமலை மழை நீரை வரவைக்க வழிவகை செய்தல்.
4. சிட்லபாக்கம் மற்றும் செம்பாக்கம் ஏரியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியின் எல்லையை வரையறுத்தல்
5. சரியான கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் ஏற்படுத்தி ஏரியில் கழிவுகள் கலக்கா வண்ணம் சுத்தம் செய்தல்.
6. மழைநீர் கால்வாய்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வெள்ளம் வராத வண்ணம் தடுத்தல்
7. ஏரியில் இருக்கும் ஆகாயத்தாமரைகளை நீக்கி, சுத்தம் செய்து தூர் வாருதல்.
8. 'Kindness Wall' வைக்க அனுமதி தருவது
9. சாலைகளில் இருக்கும் குழிகளை சரிசெய்தல்
10. மழைநீர் வடிகாலில் கலக்கும் கழிவு நீரை தடுத்தல்
11. சாலை ஆக்கிரமிப்புகளை - கண்காணித்து, அறிக்கை விட்டு அதை அகற்றுதல்
12. சாலையை அகலபடுத்துதல் - தேவையிருப்பின் ஒருவழி சாலையாக மாற்றவேண்டும்(நேரு, காந்தி, அண்ணா சாலை)
13. பஞ்சாயத்தில் வெளிப்படைதன்மை வேண்டும். டென்டர் நோட்டீஸ் சரியான நேரத்தில் வெளிபடுத்தப்பட வேண்டும்.
14. குழந்தைகளோ கால்நடைகளோ பாதிக்கப்படும் முன் Bio-Pitஐ மூட வேண்டும்.
15. சிட்லபாக்கத்திற்கான நிரந்தர EO வேண்டும்.
16. மாதாந்திர மக்கள் குறை தீர்வு பஞ்சாயத்தில் நடத்தப்பட வேண்டும்.
17. மக்கும் மக்கா குப்பை தரம் பிரித்தலை கடுமையாக அமல்படுத்த வேண்டும். அதை செய்யாத கடைகள் மற்றும் வீடுகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
18. ப்ளாஷ்டிக் உபயோகம் தடை விதிக்க வேண்டும். 
19. சேலையூர் ஏரியால் வெள்ளமாகும் சிட்லபாக்கத்தை தடுக்க வேண்டும்.
20. பாதாள சாக்கடை திட்டம் சிட்லபாக்கத்திற்கு வேண்டும்.
21. நாய் மற்றும் மாடுகளால் சாலையில் ஏற்படும் இடையூறுக்கு தீர்வு வேண்டும்.
22. முத்துலட்சுமி நகரில் இருக்கும் கிணற்றை சுத்தம் செய்து, தூர் வார வேண்டும்.
23. எரியாமல் இருகும் தெருவிளக்குகள் உடனே பழுது பார்க்க வேண்டும்.

மட்டுமின்றி திரு. S.R. ராஜா அவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் திரு.பொன்னையா அவர்களுடன் ஒரு சந்திப்பு ஏற்படுத்துவதாக உறுதியளித்திருக்கிறார். சிலது அங்கேயே தீர்வு காணப்பட்டது, சிலது விரைந்து முடிக்க வேண்டிய அவசியம் பற்றி கருத்து பரிமாறப்பட்டது. 

முக்கியமாக 50க்கும் மேற்பட்ட பகுதி மக்கள் இணைந்து ஒருமித்தமாக சிட்லபாக்கத்தை சிறந்த ஊராக மாற்ற குரல் கொடுத்தது மகிழ்வுக்குரியது. இது மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் அத்தனை பேரும் வந்து கேள்வி கேட்க வேண்டும். அது உங்கள் கடமை. யாரேனும் செய்வார்கள் என உட்கார்ந்திருந்தால் என்றுமே இதற்கு ஒரு தீர்வு வரப்போவதில்லை என்பதை மட்டும் நாம் அறியவேண்டும்.

ஒன்றாக இணைந்து கேள்வி கேட்போம். நமக்கு வேறெதுவும் வேண்டாம். சிட்லபாக்கம் சிறந்த ஊராக மாற வேண்டும். அடுத்த தலைமுறைக்கு நல்ல ஊரை விட்டு செல்ல வேண்டும். அவ்வளவே.. 

இன்று வைக்கப்பட்ட கோரிக்கைகள் மீதான நடவடிக்கையை பற்றி நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். கேள்வி கேட்போம். 

Comments